நடிகர் அஜித் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றிவர திட்டமிட்டிருப்பதாக அவரது மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' திரைப்படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்த அஜித், அந்நாட்டில் பைக் பயணம் மேற்கொண்டார். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு உலகளாவிய பைக் பயணம் குறித்து அஜித் பரிசீலித்து வந்ததாகவும் அதில் முதல் கட்டமாக ரஷ்யாவில் தொடங்கியதாகவும் அப்போது கூறப்பட்டது.
தற்போது, உலகம் முழுவதும் பைக்கில் தனியாகப் பயணம் மேற்கொண்ட இரானைச் சேர்ந்த மரால் யஸார்லூவை அஜித் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, "மரால் யஸார்லூவுடன். பைக்கில் உலகம் முழுவதும் மரால் தனியாகப் பயணப்பட்டிருக்கிறார். 7 கண்டங்கள், 54 நாடுகளுக்கு அவர் சென்று வந்திருக்கிறார். மராலின் அனுபவங்களைக் கேட்டறிந்து, எதிர்காலத்தில் உலகம் முழுவதும் தான் மேற்கொள்ளவிருக்கும் பைக் பயணத்துக்கான யோசனைகளையும் பெற அஜித் குமார் டெல்லியில் மராலைச் சந்தித்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மரால் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிலிருந்து தனது பைக் பயணத்தைத் தொடங்கினார். ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பியக் கண்டங்களுக்கு அவர் பயணப்பட்டார். தொடர்ந்து 18 மாதங்கள் நடந்த இந்தப் பயணத்தின் மூலம் புதிய சாதனையையும் மரால் படைத்தார்.
தற்போது இரானியப் பெண்களுக்கு பைக் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மரால் பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago