ஓடிடியில் வெளியாகிறது லிஃப்ட்

By செய்திப்பிரிவு

கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'லிஃப்ட்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நாயகனாக நடித்துள்ள படம் 'லிஃப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியது. சில தினங்களுக்கு முன்பு ஈகா என்டர்டெயின்மென்ட் - லிப்ரா நிறுவனம் இரண்டிற்கும் இடையே மோதல் உருவானது. இரு நிறுவனங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தன.

தற்போது 'லிஃப்ட்' படம் ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் நேரடி வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. நவம்பரில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்