தன்னிடம் பணிபுரிந்த உதவி இயக்குநரை இயக்குநராக அறிமுகப்படுத்தவுள்ளார் பா.இரஞ்சித்.
தன்னிடம் பணிபுரியும் உதவி இயக்குநர்கள் நல்ல கதையுடன் வந்தால், தானே தயாரித்து அவர்களை இயக்குநராக்கி அழகு பார்க்கும் பழக்கமுடையவர் பா.இரஞ்சித். தற்போது அவரிடம் பணிபுரிந்த தினகரன் சிவலிங்கம் என்பவரை இயக்குநராக அறிமுகப்படுத்தவுள்ளார்.
இவர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த 'கபாலி', 'காலா' ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமகால தமிழகச் சூழலில் இருக்கும் முக்கியப் பிரச்சினையை மையமாகக் கொண்டு நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தனது படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் தினகரன் சிவலிங்கம்.
இந்தப் படத்தை பா.இரஞ்சித், 'மெட்ராஸ்' படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்ட போஸ்டர் நந்தகுமாரின் மகன் அருண் பாலாஜி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago