'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரிலிருந்து விஜே தீபிகா நீக்கப்பட்டுள்ளார்.
தமிழில் ஸ்டார் விஜய் சேனலில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. சுஜிதா, ஸ்டாலின் முத்து, வெங்கட், ஹேமா, குமரன் தியாகராஜன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். 500 பகுதிகளுக்கும் மேல் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தமிழில் பெரும் வெற்றி பெற்ற தொடர்களில் ஒன்றாக இருக்கிறது.
ஏற்கெனவே இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்காளம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மாநில நடிகர், நடிகையருடன், கதை மற்றும் கள அமைப்பில் சில மாறுதல்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் இத்தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து விந்த விஜே தீபிகா திடீரென இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடிக்கும் சாய் காயத்ரி நடிக்கவுள்ளார்.
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர்லிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள விஜே தீபிகா தனது முகத்தில் பருக்கள் இருந்ததால் அதற்காக தான் சிகிச்சை பெற்று வந்தததாகவும், சீரியல் படப்பிடிப்புக்காக மேக்கப் போடும்போது பருக்கள் தொடர்ந்து அதிகமானாதால் தன்னை சீரியலை விட்டு நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago