'கிளாப்' படக்குழுவினருக்குத் தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.
பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கிளாப்'. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தின் டீஸரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன். "இந்தி திரையுலகைச் சேர்ந்த கலைஞர். தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் எளிதாக, சவுகரியமாக நடிக்கிறார். திரைப்படங்கள் உண்மையில் உலகத்துக்குப் பொதுவானவை. அகான்ஷா, வாழ்த்துகள்" என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தி திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சனின் வாழ்த்தால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது 'கிளாப்' படக்குழு. இதில் பிரகாஷ்ராஜ், அகான்ஷா சிங், கிரிஷா குரூப், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் ஆதியுடன் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளராக இளையராஜா, ஒளிப்பதிவாளராக பிரவீன் குமார், கலை இயக்குநராக வைரபாலன், எடிட்டராக ராகுல் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
45 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago