மணிகண்டன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
மணிகண்டன் - விஜய் சேதுபதி கூட்டணி இணைப்பில் வெளியான படம் 'ஆண்டவன் கட்டளை'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்துக்குப் பிறகு இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தார்கள்.
தற்போது மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைசி விவசாயி' படத்தில் விஜய் சேதுபதி ஒரு கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் ஓடிடி வெளியீடாக இருந்த இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த முறை முழுமையான கமர்ஷியல் கதையொன்றைத் தயார் செய்து வைத்துள்ளார் மணிகண்டன். தற்போது மணிகண்டன் - விஜய் சேதுபதி இருவருமே தேதிகள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
» முருங்கைக்காய் காட்சி இப்போது புகழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி: பாக்யராஜ்
» நான் நல்ல படம் எடுத்த தயாரிப்பாளர் இல்லை: தயாரிப்பாளர் ரவீந்தர்
விரைவில் இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago