அஜித் அற்புதமான மனிதர் - நடிகர் நவ்தீப் புகழாரம்

By செய்திப்பிரிவு

அஜித்துடன் நவ்தீப் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு இந்தியாவில் நிறைவடைந்தது. வெளிநாட்டில் படமாக்கவேண்டிய காட்சிகள் மட்டும் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தற்போது கரோனா தொற்று குறைந்து படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் படத்தின் சில சண்டைக் காட்சிகளைப் படமாக்க ரஷ்யா சென்றிருந்தது படக்குழு. தன்னுடைய காட்சிகளை முடித்துக்கொடுத்த அஜித், ரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் இந்தியா திரும்பிய அஜித் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு பைக் ரேஸ் நிகழ்வில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் நடிகர் நவ்தீப்பும் கலந்துகொண்டார். நவ்தீப் அஜித்துடன் ‘ஏகன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார். அப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் நேற்று அஜித்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நவ்தீப் வெளியிட்டுள்ளார்.

அதில் தனது பதிவில் ‘அஜித் அன்பான மனிதர். அவர் ஹாய் சொன்ன விதமே நாங்கள் சந்திந்து நீண்ட நாட்களாகி விட்ட உணர்வை ஏற்படுத்தியது. அவரது எளிமையும், நுண்ணறிவான இயல்பும் ஒரு அருமையான அனுபவமாக இருந்தது. உண்மையிலேயே ஒரு அற்புதமான மனிதர்’ என்ற்கு கூறியுள்ளார்.

அஜித்துடன் நவ்தீப் எடுத்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

மேலும்