சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் அக்டோபரில் வெளியாகும் என அனைவரும் எதிர்நோக்கி இருந்தனர்.
ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் 'தீபாவளி வெளியீடு' என்று அறிவித்துள்ளது படக்குழு. ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்துடன் மோதவுள்ளது. விரைவில் படத்தின் அடுத்த பாடல், ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.
'மாநாடு' படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago