நாடி நரம்பு முறுக்க முறுக்க...: ’அண்ணாத்த’ மோஷன் போஸ்டர் வெளியீடு

By செய்திப்பிரிவு

ரஜினி வசனத்துடன் கூடிய 'அண்ணாத்த' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (செப்டம்பர் 10) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 11 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகும் என அறிவித்தது படக்குழு.

அதன்படி சன் டிவியின் யூடியூப் பக்கத்தில் 'அண்ணாத்த' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை ரஜினி பேசும் "நாடி நரம்பு முறுக்க முறுக்க... ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க.. அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க.. தொடங்குது ஓங்கார கூத்து.." என்ற வசனத்துடன் வடிவமைத்துள்ளார்கள்.

மேலும், அந்தப் போஸ்டரில் ரஜினி அமர்ந்துள்ள புல்லட் வண்டியின் நம்பர் SS 1212 என்று இருந்தது. இதனை ரஜினி ரசிகர்கள் 'SUPER STAR' என்பதையே SS எனவும், '1212' என்பது அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ஐ குறிக்கிறது எனவும் குறிப்பிட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்