'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் விவகாரம் தொடர்பாக 2டி நிறுவனத்துக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் சீக்யா எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை இணைந்து தயாரித்திருந்தன. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த வரவேற்பால் இந்தி ரீமேக் உரிமை உறுதியானது. இதனை சூர்யாவின் 2டி நிறுவனமும், அபூன்டான்டியா நிறுவனமும் இணைந்து தயாரிக்க திட்டமிட்டு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த ரீமேக் உரிமைக்கு தங்களிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று சீக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
சீக்யா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 2டி நிறுவனம் மற்றும் அபுன்டான்டியா நிறுவனம் ஆகியவை இணைந்து 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்கக் கூடாது எனவும், அதற்கு உடனே தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (செப்டம்பர் 7) வந்தது.
இந்த விசாரணையின் போது 2டி நிறுவனம் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு, 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கிற்கு தடையை நீக்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் 2டி நிறுவனம் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக அவர் எழுதிய ‘சிம்ஃப்ளி ஃப்ளை’ என்ற நூலிற்கான காப்புரிமை தொகை, அவரது சம்மதம் மற்றும் அதற்கான திரைப்பட உரிமை தொகை உள்ளிட்ட அனைத்து கட்டணத்தையும் 2டி நிறுவனம் முழுமையாக கேப்டன் கோபிநாத்திடம் நேரடியாக செலுத்தி இருக்கிறது. அத்துடன் 2டி நிறுவனம், இவ்விவகாரம் தொடர்பாக ஒப்புதல் மற்றும் உதவி செய்ததற்காக சீக்யா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு பெரும் தொகையை (காப்புரிமை உரிமம் பெறுவதற்கான இடைத்தரகு தொகையாக ) முழுமையாக வழங்கியிருக்கும் ஆதாரங்களையும் தாக்கல் செய்தது.
இந்த ஆதாரங்களைக் கொண்டே, 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் உரிமைக்கான தடையை நீக்கி உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்தப் படத்தினை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியில் இயக்கவுள்ளார். தடை நீக்கப்பட்டுள்ளதால் படத்தின் பணிகளை விரைவில் துவங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக 2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், "இந்த தீர்ப்பின் மூலம் நீதி மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நீதித்துறையின் மீது நேர்மறையான எண்ணம் மேலோங்கி இருக்கிறது. 'சூரரைப் போற்று' படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் இந்தி பதிப்பிற்கான பணிகள் விரைவில் முழுவீச்சில் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago