இதுதான் நான் 13: 12பி பஸ்ஸும் 5 பைசா வெல்லமும்

By பிரபுதேவா

ஸ்கூல் போறப்ப பஸ்ல டிக்கெட் எடுக்காமப் போனது, வரிசையா நிக்கிற சைக்கிளையெல்லாம் சாய்ச்சுவிட்டுட்டு ஓடி வர்றது, பெட்டிக் கடையில வெல்லம் திருடுறதுன்னு நண்பர்களோட சேர்ந்து செஞ்ச குறும்புத்தனத்துக்கு அளவே இல்லை.

பெரும்பாலும் 12 பி பஸ்லதான் ஸ்கூல் போவேன். நெருக்கமாப் போனாலும் 100 பேருக்குத்தான் இடம் இருக்கும். ஆனா, பஸ்ல 200 பேருக்கும் மேல அடைச்சிக்கிட்டு போவோம். ஸ்கூல் பசங்கதான் முக்கால்வாசி. கண்டக்டர் ஒரு முனையில நிக்கிறார்னா அதுக்கு அடுத்தமுனை படியில ஏறிட்டு, அவர் வரக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டே மறைஞ்சி நின்னுப்பேன். என்னை மாதிரி நிறையப் பேரு டிக்கெட் எடுக்காம, காசை மிச்சம் பிடிச்சு சேர்த்துவெச்சு அடுத்த நாள் ஸ்கூல் கேன்டீன்ல நண்பர்களோட சேர்ந்து பன்னீர் சோடா, சமோசா வாங்கி சாப்பிடுவோம்.

நண்பர்களோட சேர்ந்து பெட்டிக் கடையில திருடுறதும் மாபெரும் கலை. எனக்கு அஞ்சு பைசா வெல்லம் ரொம்பப் பிடிக் கும். திருடுறது தப்புதான். ஆனா, அந்த வயசுல அது தெரியலை. பெட்டிக் கடைக்காரர்கிட்ட ஒரு பொருளைக் கேட்பேன். அவர் திரும்பிப் பார்க்கிற அந்த செகண்ட்ல பாட்டில் மேல் மூடியத் திறந்துடுவேன். அப்படி திறக்குறப்ப சத்தம் கொஞ்சம்கூட வரக் கூடாது. ‘அது இல்லையே தம்பி’னு அவர் திரும்புவார். ‘அதோ இருக்கே அதுவான்னு பாருங்க’என்பேன். மீண்டும் அவர் திரும்புற அந்த சின்ன செகண்ட்ல லூஸா திறந்து வெச்ச மூடியத் திறந்து வெல்லத்தை எடுத் தாகணும். அவர் திரும்புற நேரத்தையும், முகத்தை திருப்புற நேரத்தையும் கணக்குப் போட்டு சரியா எடுப்பேன். கொஞ்ச நேரத்துக்குள்ள இதெல்லாம் நடந் தாகணும். அந்த வயசுல அதை நானும், என் ஃபிரெண்ட்ஸும் த்ரில்லா நடத்தியிருக்கோம். அங் கிருந்து ரெண்டு, மூணு அடிங்க ஏதோ சாதிச்சிட்டு வர்ற மாதிரி நடந்துட்டு, அப்புறம் ஒரு ஓட்டம் எடுப்போம் பாருங்க, வீட்டு மொட்டை மாடிக்கு வந்துதான் நிப்போம். அப்படி ஒரு வேகம். அந்த வேகம்தான் இன்னைக் கும் இருக்குன்னு நெனைக்கிறேன்.

ஏழாம் கிளாஸ் வந்த பிறகுதான் ஆழ்வார்பேட்டை நாரத கானா சபா எதிர் சந்துல சொந்த வீடு வாங்கினோம். அதுக்கு முன்னாடி வரைக்கும் மயிலாப்பூர், விவேகானந்தா காலேஜ் எதிர்லதான் எங்க வீடு. விவேகானந்தா காலேஜ் ரோட் டுல 30 வருஷத்துக்கு முன்னாடில்லாம் அவ்வளவா வண்டிங்க வராது. அங்கே இருந்த வீட்டுக்கு முன்னாடி பெரிய ஃபிளாட்பார்ம் இருக்கும். அதுக்கு அப் புறம் கொஞ்ச தூரத்துக்கு மணலா இருக் கும். அப்புறம்தான் மெயின்ரோடு. ஃபிரெண்ட்ஸோட சேர்ந்து விளையாடுற துக்குத்தான் அவ்ளோ இடத்தையும் விட்டு வெச்சிருக்காங்கன்னு நெனைச்சிப் பேன். மெயின் ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிற காலேஜ் காம்பவுண்ட்டை எல்லையா வெச்சிக்கிட்டு இந்தப் பக்கம் ஃபிளாட்பார்ம்ல இருந்து கிரிக்கெட் விளையாடுவோம். இன்னைக்கு அந்த இடமெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி ஆகிடுச்சு.

விவேகானந்தா காலேஜ்ல படிக்கிற மாணவர்களுக்குக்கூட காலேஜுக்குள்ள போய், வர எத்தனை வழி இருக்குன்னு தெரியாது. எங்களுக்கு அத்தனை வழிகளும் அத்துப்படி. யாருக்குமே தெரியாம காலேஜ்குள்ளே போய் பெல் அடிச்சுட்டு ஓடி வந்துடுவோம். எங்களை கவனிக்கிறதையே ஒரு வேலையா வாட்ச்மேன்கள் வெச்சிருந்தாங்க.

சரவணன், லல்லி, ராஜி, அசோக், தமிழரசி, ரவின்னு ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. இப்போ ‘பூலோகம்’படம் டைரக்ட் செஞ்ச கல்யாண் இருக்காரே, அவரும் இதில் உண்டு. அந்த ரோட்டுக்கு யாராவது சைக்கிள், ஸ்கூட்டர்ல வந்தா அதை எடுத்துட்டு ரவுண்ட்ஸ் அடிப் போம். வண்டி ஓனர் திரும்பி வர்றதுக் குள்ள கொண்டு வந்து வெச்சிடுவோம். நாங்க வண்டியை எடுத்து சுத்தினது அவங்களுக்குத் தெரியாது. ‘சாவியை வண்டியில வெச்சிட்டுப் போக மாட் டாங்களே’ன்னு எல்லோரும் நினைக்க லாம். சாவியை விட்டுட்டுத்தான் போவாங்க. அந்த ஏரியா மேல அப்படி ஒரு நம்பிக்கை. அந்த ரோட்ல ரொம் பவும் சாதாரண ஆட்கள்தான் வாழ்ந் தாங்க. எல்லாரும் ரொம்ப நல்லவங்க. ஜாலியா இருப்பாங்க. அந்த ரோடே ஒரு கூட்டுக் குடும்பம் மாதிரி இருக்கும். கில்லி, கோலி, பம்பரம், காத்தாடி விளை யாட்டுன்னு பொழுது போகும். இப்போ இருக்கிற பசங்க இதையெல்லாம் விளையாடி நான் பார்த்ததே இல்லை. இதில் என் பசங்களும் அடங்கும். சின்ன வயசுல நான் விளையாடிட்டே இருப்பேன். அந்த எனர்ஜிதான் இப்பவும் டான்ஸ்ல இருக்கு போலிருக்கு.

அதுவும் சனி, ஞாயிறுன்னா கொண் டாட்டம்தான். அப்படி இருந்துட்டு திங்கள் கிழமை காலையில ஸ்கூல் போக ணும்னா மனசுல அப்படி ஒரு சோகம் தொத் திக்கும். அதை பயம்னே சொல்லலாம். எவ்வளவோ தடவை, ஏன் இப்போகூட திங்கள்கிழமைன்னா ‘ஐயையோ ஸ்கூல் இருக்கே’ன்னு எழுந்திருச்சிருக்கேன். அப்புறமாத்தான், ‘இல்லையே நாம இப்போ சினிமாவுலதானே இருக்கோம், படிக்கலையே’ன்னு தூங்கப் போயிடுவேன்.

சாந்தோம் ஸ்கூல் கிரவுண்ட் ரொம் பவும் பெருசு. அப்போ ஃபுட்பால்தான் என் விருப்பம். கிரவுண்ட்ல ஒரே நேரத்துல 800 பேர் விளையாடலாம். பதினோறு பதினோறு பேராப் பிரிஞ்சி விளையாடு வோம். எந்த பந்து எங்களோடதுன்னு சரியா கண்டுபிடிச்சு விளையாடுவோம். பெரும்பாலும் கையில சிலிப்பரை வெச்சிக்கிட்டேதான் விளையாடுவோம். அதை யாராவது எடுத்துட்டு போய்டு வாங்களோன்னுதான்.

ஸ்கூல் வாசல்ல ஒருத்தர் கடை வெச் சிருந்தார். அவரை செல்லமா நாங்க டிக்கின்னு கூப்பிடுவோம். அவர் கடை யில் விற்கிற மாங்காய், நெல்லிக்காய் அப்படி ஒரு டேஸ்ட். எனக்கும், என் னோட ஃபிரெண்ட்ஸுக்கும் லைஃப்ல ஒரு பகுதியாவே டிக்கி மாறியிருந்தார். ஸ்கூல் டீச்சருக்கு எவ்வளவு மரியாதை கொடுப் போமோ, அவ்வளவு முக்கியத்துவம் டிக்கிக்கும் கொடுப்போம்.

எங்க ஸ்கூல்ல பொண்ணுங்களே இல்லை. பாய்ஸ் ஸ்கூல். பதினைஞ்சு, பதினாறு வயசு வரைக்கும் பொண் ணுங்கக்கிட்ட அதிகம் பேசினதே இல்லை. ஒன்பதாவது படிக்கிறப்ப 12பி பஸ்ல போனப்ப, ஒரே ஒரு தடவை ரோஸரி கேர்ள்ஸ் ஸ்கூல் பொண்ணு, நான் படிக்கட்டுல கூட்ட நெரிசல்ல நின்னுக்கிட்டிருந்ததைப் பார்த்துட்டு, என் டிபன் பாக்ஸை வாங்கி வெச்சிக்கிட்டாங்க. அதை ஸ்கூல்ல வந்து சொன்னேன். அந்த சம்பவமே எங்க ஃபிரெண்ட்ஸுக்குள்ள ரெண்டு நாளைக்கு ஓடுச்சு. இப்போ கூட ஞாபகம் இருக்கு. அந்தப் பொண்ணுக்கு பெரிய நெத்தி, ரிப்பன் கட்டியிருப்பாங்க. இதெல்லாம் இப்ப இருக்கிற பசங்களுக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனா, இன்னைக்கும் ஞாபகம் வெச்சிக்கிற அளவுக்கு பெரிய விஷ யமா என்னோட மனசுல அது இருக்கு.

ஸ்கூல்தான் எனக்குக் கோயில். படிப்பு, டிசிப்ளின், விளையாட்டு, நட்பு, பங்க்சுவாலிடின்னு எல்லாமும் கத்துக்கொடுத்திச்சு. எங்களுக்கு எல்லாமும் அதுதான். ஏன், உலகமே அதுதான்!

எங்க ஸ்கூல் பக்கத்துல செயின்ட் பீட்ஸுன்னு ஒரு ஸ்கூல் இருக்கு. எப்பவும் அந்த ஸ்கூல் பசங்களும், நாங்களும் ‘அக்னி நட்சத்திரம்’ பட கார்த்திக், பிரபு மாதிரிதான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்போம். ஏன்னா? அதை அடுத்த வாரம் சொல்றேனே!

- இன்னும் சொல்வேன்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்