தீபாவளி போட்டி உறுதியானது: அண்ணாத்த vs வலிமை

By செய்திப்பிரிவு

தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் வலிமை படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஆகியவற்றை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பை முடித்து, இந்தியா திரும்பிவிட்டது படக்குழு. முதலில் இந்தப் படத்தை ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று திட்டமிட்டார்கள். ஆனால், தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை என்பது தெளிவாகிவிட்டது.

இதனால் 'வலிமை' படமும் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த 'பேட்ட' மற்றும் அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது. தற்போது அதே போல் 'அண்ணாத்த' மற்றும் 'வலிமை' படங்கள் ஆகியவை வெளியாகவுள்ளன.

ஒரே சமயத்தில் ரஜினி மற்றும் அஜித் படங்கள் வெளியிடத் திட்டமிட்டு இருப்பது, விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இரண்டுமே பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் என்பதால் வசூல் பாதிக்கும் என்பது அவர்களுடைய கவலையாக இருக்கிறது. ஆனால், வேறு சரியான வெளியீட்டுத் தேதி தற்போதைக்கு இல்லை என்பதால் தீபாவளி வெளியீட்டில் இரண்டு படங்களுமே உறுதியாக இருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்