'மங்காத்தா 2' தொடர்பாக ஹர்பஜன் சிங்கிற்கு இயக்குநர் வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜே.பி.ஆர் - ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம் 'பிரண்ட்ஷிப்'. இதில் ஹர்பஜன் சிங், அர்ஜுன், சதீஷ், லாஸ்லியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று (செப்டம்பர் 6) இணையத்தில் வெளியிடப்பட்டது.
'பிரண்ட்ஷிப்' ட்ரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து வெளியிட்டார்கள். இவர்களுக்கு இருவருக்குமே ஹர்பஜன் சிங் தனது வழக்கமான பாணியில் ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஹர்பஜன் சிங் "வெங்கட் ஜி ரொம்ப நன்றி !! மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தல கிட்ட கேட்டதா சொல்லுங்க" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக பஞ்சாபி மொழியில் வெங்கட் பிரபு, "மங்காத்தா இரண்டாம் பாகம் நடந்தால் அதில் நீங்கள் நடிப்பீர்களா? நான் எப்போதுமே உங்களுடைய தீவிர ரசிகன். உங்களுடைய 'பிரண்ட்ஷிப்' படத்துக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
» ஒரே நாளில் வெளியாகும் 2 ஆர்யா படங்கள்?
» திரையரங்குகளை திறக்க வேண்டும்: மகாராஷ்டிர அரசுக்கு கங்கணா வேண்டுகோள்
மேலும், 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யா - பசுபதி இருவரும் சைக்கிளில் செல்லும் மீம்ஸ் இணையத்தில் பெரும் பிரபலம். அதனை முன்வைத்து ஆர்யாவுக்கு ஹர்பஜன் சிங் "கபிலா என்ன ஒரு ரவுண்ட் அந்த சைக்கிள்ல கூட்டிட்டு போ பா.. நன்றி ஆர்யா ஜி !!" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago