முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ‘விருமன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் ‘கொம்பன்’. ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது கார்த்தி - முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இப்படத்துக்கு ‘விருமன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முத்தையாவின் முந்தைய படங்களைப் போல இப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘மாநகரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.கே.செல்வகுமார் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று (ஆக 06) நடைபெறுகிறது. வரும் 18-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கவுள்ளது.
ஏற்கெனவே 2டி எண்டெர்டெய்ன் தயாரிப்பில் ‘கடைக்குட்டிசிங்கம்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago