அஜித்துக்கு அன்பளிப்பு வழங்கிய கார் ஓட்டுநர்

By செய்திப்பிரிவு

அஜித்தின் அன்பால் ஈர்க்கப்பட்ட ரஷ்ய கார் ஓட்டுநர் அவருக்கு அன்பளிப்புகள் வழங்கியுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு இந்தியாவில் நிறைவடைந்தது. வெளிநாட்டில் படமாக்கவேண்டிய காட்சிகள் மட்டும் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தற்போது கரோனா தொற்று குறைந்து படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் படத்தின் சில சண்டைக் காட்சிகளைப் படமாக்க ரஷ்யா சென்றிருக்கிறது படக்குழு. தன்னுடைய காட்சிகளை முடித்துக்கொடுத்த அஜித், ரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் காலம்னா நகரில் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநராக இருப்பவர் அலெக்ஸ். தினமும் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு தன்னுடைய காரில் ஏற்றிச் செல்வது அலெக்ஸின் வழக்கம்.

அப்படி அழைத்துச் செல்லும்போது அஜித்தின் அன்பாகப் பழகும் குணத்தால் ஈர்க்கப்பட்ட அலெக்ஸ் அஜித்துக்கு அன்பளிப்புகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதில் ‘அஜித், காலம்னா நகரம் உங்களை நேசிக்கிறது’ என்று அச்சிடப்பட்ட இரண்டு டி-ஷர்ட்களையும் அஜித்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்