ஹர்பஜன் சிங் நாயகனாக நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத் தொடர், கவுரவ கதாபாத்திரம் எனத் தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார் ஹர்பஜன் சிங். அவர் முதன் முதலில் நாயகனாக நடித்துள்ள படம் 'பிரண்ட்ஷிப்'. இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
அர்ஜுன், சதீஷ், லாஸ்லியா உள்ளிட்ட பலர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்காகக் காத்திருந்தது. ஓடிடிக்குப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் வெளியீட்டு எண்ணத்தை மாற்றியுள்ளது படக்குழு.
தற்போது செப்டம்பர் 17-ம் தேதி 'பிரண்ட்ஷிப்' படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்
» ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என விமர்சிக்காதீர்கள்: விஜய் சேதுபதி
"நாங்க வரோம்!!! உங்க ஆதரவோட உங்கள மகிழ்விக்கணும் அப்பிடுகிற எண்ணத்தோட "செப்டம்பர் 17" நம்ம படம் உலகம் முழுக்க தியேட்டர் ரிலீஸ்!! சூப்பர்ஸ்டார், தல, தளபதி படம் மாதிரி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்கும்"
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago