நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

By செய்திப்பிரிவு

'குரங்கு பொம்மை' இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'குரங்கு பொம்மை'. 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார் நித்திலன்.

சில நடிகர்களின் படங்களை இயக்க ஒப்பந்தமானாலும், திட்டமிட்டபடி அந்தப் படம் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது நித்திலன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் நித்திலன்.

இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்