ஒரே மாதத்தில் விஜய் சேதுபதியின் 4 படங்கள்

By செய்திப்பிரிவு

செப்டம்பர் மாதத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 4 படங்கள் வெளியாகவுள்ளன.

நாயகன், வில்லன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனத் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருபவர் விஜய் சேதுபதி. அவர் நடிப்பில் உருவான பல்வேறு படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால், சில படங்கள் ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்துள்ளன.

இதில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் விஜய் சேதுபதி நடிப்பில் 4 படங்கள் வெளியாகவுள்ளன. மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்' திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அறிமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அனபெல் சேதுபதி' திரைப்படம் செப்டம்பர் 17-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும், மணிகண்டன் இயக்கத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கடைசி விவசாயி' திரைப்படமும் இந்த மாதத்தில்தான் வெளியாகவுள்ளது. ஆனால், தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்