லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து 'ரெயின் ஆன் பிலிம்ஸ்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம், படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ், குறும்படங்கள் உள்ளிட்ட பல விஷயங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். தற்போது கமல்ஹாசன் நடித்துவரும் 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ரெயின் ஆன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார்.

முதலில் இந்தப் படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளதாக லிங்குசாமி அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து 'விக்ரம்' படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக நாயகனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

மேலும்