‘மிமி’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
லட்சுமண் உடேகர் இயக்கத்தில் கீர்த்தி சனோன், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'மிமி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினார்கள். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியானது.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து, தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.
'Mala Aai Vhhaychy!' என்ற மராட்டிய மொழி படத்தின் இந்தி ரீமேக்தான் 'மிமி' என்பது குறிப்பிடத்தக்கது. 2011-ம் ஆண்டு வெளியான மாரட்டிய மொழி படத்தை 2013-ம் ஆண்டு 'வெல்கம் ஒபாமா' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரீமேக்கினை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
29 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago