கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழில் திரைப்படமாக வெளியாக உள்ளது. பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனங்கள் சார்பில் ரூ.500 கோடி செலவில்இப்படம் எடுக்கப்படுகிறது. இதன்இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் மத்தியப்பிரதேச மாநிலத்தின் கோட்டைகளில் நடைபெறுகின்றன.
இதன் படப்பிடிப்பு, உத்தரபிரதேசத்தின் ஜான்சிக்கு அருகில்உள்ள ஓர்ச்சாவில் 3 நாட்கள் நடைபெற்றன. குவாலியர் கோட்டையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொள்ள அறுவை சிகிச்சைக்கு பின்னர் நடிகர் பிரகாஷ்ராஜ் இங்கு முதன்முறையாக வந்துள்ளார். இவருடன் நடிகர்கள் கார்த்தி, விக்ரம் பிரபு நடிகை த்ரிஷா ஆகியோரும் வந்திருந்தனர்.
இவர்களுக்கான காட்சிகளில் போர் வீரர்கள் குதிரைகளில் அமர்ந்து செல்வது போல் படமாக்கப்படுகிறது.
இதற்காக 18 குதிரைகள் சென்னையில் இருந்து 5 மினி லாரிகளில் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டிருந்தன. குவாலியர் நகரினுள் விக்கி பேக்டரியின் அருகில்நுழைந்த போது ஜான்சி சாலை காவல் நிலைய போலீஸார் மினிலாரிகளை தடுத்து சோதனையிட்டனர். அதில் இருந்த 18 குதிரைகளை கைப்பற்றி பூல்பாக் மைதானத்தில் வைத்தனர்.
குதிரைகள் குறித்து போலீஸார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதில் சிலரும் அங்கு விசாரித்த போது, குதிரைகளை கொண்டு வந்த குழுவினரிடம் போதுமான ஆவணங்கள் இருந்தது தெரிந்தது. இக்குதிரைகள் அனைத்தும் குவாலியரில் நடைபெறும் தமிழ்ப் படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்பட்டது. இதை மணிரத்னத் திடமும் உறுதிசெய்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் குதிரைகள் தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் குவாலியர் நகர எஸ்.பி.நாகேந்திர சிங் சிகர்வார் கூறும்போது, ‘‘முஸ்லிம்களின் முஹர்ரம் நேரம் என்பதால் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டிருந்தது.
அதனால் குதிரைகள் கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்டன. பிறகு, அரசு அனுமதியுடன் படப்பிடிப்புக்கு வந்தது அறிந்து விட்டு விட்டோம். ஏனெனில், வீட்டு விலங்குகளை சித்ரவதை செய்யாமல் காட்சிப்படுத்த சட்டங் களில் அனுமதி உண்டு’’ என்றார்.
இதுபோன்ற குதிரைகள் வட மாநிலங்களிலும் உள்ளன. எனினும், அவை பழக்கம் இல்லாததன் காரணமாக படப்பிடிப்புகளில் ஒத்துழைப்பது கடினம். எனவே, ஏற்கெனவே படப்பிடிப்புகளில் பழக்கப்பட்ட குதிரைகள் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டி ருந்தன. அவற் றுக்கு ஓர்ச்சாவில் ஏற்படாத சிக்கல் குவாலியரில் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago