கார்த்திகேயாவுக்கு அவரது காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'. இன்னும் இதன் வெளியீட்டுத் தேதி முடிவாகவில்லை. இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருப்பவர் கார்த்திகேயா. அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
தெலுங்கில் 'ஆர்.எக்ஸ்.100', 'கேங் லீடர்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திகேயா. தற்போது தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்யவுள்ளார். இன்று (ஆகஸ்ட் 23) அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக கார்த்திகேயா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என் உயிர்த் தோழியுடன் எனது திருமண நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். 2010ல் நான் முதலில் அவரை லோஹிதாவை நித்வரனகலாலில் சந்தித்ததில் இருந்து இப்போது வரை இன்னும் பல ஆண்டுகள் இணைந்திருப்போம்"
இவ்வாறு கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago