ட்விட்டர் தளத்தில் வழக்கமாக நடைபெறும் ஹேஷ்டேக் போட்டிகளில் #Valimai சாதனை புரிந்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 23) சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ட்விட்டர் தளம் ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் #Valimai ஹேஷ்டேக் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 2-வது இடத்தை #Master ஹேஷ்டேக் பிடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்த இடங்களை வைத்து அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே சண்டையும் நடைபெற்று வருகிறது.
#SarkaruVaariPaata, #AjithKumar, #Thalapathy65, #iheartawards, #rubinadilaik, #bts, #Covind19 மற்றும் #Vakeelsaab ஆகிய ஹேஷ்டேகுகள் வரிசைப்படி அமைந்துள்ளன. இதில் அஜித் மற்றும் விஜய் சம்பந்தப்பட்ட 2 ஹேஷ்டேகுகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது அஜித் நடித்து வரும் 'வலிமை' படமும் இன்னும் வெளியாகவில்லை. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது. மேலும், விஜய் நடித்து வரும் படத்துக்கு 'பீஸ்ட்' என்று பெயரிடுவதற்கு முன்பு #Thalapathy65 என்று அழைத்து வந்தது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago