சீரியலில் அறிமுகமாகும் நமீதா

By செய்திப்பிரிவு

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்துள்ளார் நமீதா.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. திருமணத்துக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரங்கள் அமையும் படத்தில் மட்டுமே அவர் நடித்து வந்தார். சமீபத்தில் புதிதாக ஓடிடி தளம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

மேலும், தயாரிப்பாளராக 'பவ் பவ்' என்ற படத்தையும் தயாரித்துள்ளார் நமீதா. தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தில் நமீதா நடித்தும் உள்ளார். தற்போது புதிதாக சீரியல் ஒன்றில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ஜீ தமிழிலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'புதுப்புது அர்த்தங்கள்'. தேவயானி, அபிஷேக் சங்கர், லியோனி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியலில் நடித்துள்ளார் நமீதா. அவர் சம்பந்தப்பட்ட புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த சீரியலில் நமீதா முழுமையாக நடிக்கவுள்ளாரா அல்லது கவுரவ கதாபாத்திரம் தானா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்