'பொன்னியின் செல்வன்' படத்தை முடித்துவிட்டு, முத்தையா இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தொடங்கவுள்ளார் கார்த்தி.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்துக்காக நீண்ட முடி வளர்த்து தயாராகியுள்ளார். இதனால் அவருடைய இதர படங்கள் படப்பிடிப்பு தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.
'பொன்னியின் செல்வன்' படத்தை முடித்துவிட்டு, மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'சர்தார்' படத்தை கார்த்தி துவங்குவார் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது.
ஆனால், தற்போது தனது படங்களின் வரிசையில் சிறு மாற்றம் செய்துள்ளார் கார்த்தி. 'பொன்னியின் செல்வன்' படத்தை முடித்துவிட்டு, 'கொம்பன்' இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இந்தப் படத்தை ஒரே கட்டமாக முடிக்கவும் முடிவு செய்துள்ளார் கார்த்தி.
கார்த்தி - முத்தையா படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வில் முத்தையா கவனம் செலுத்தி வருகிறார். முத்தையா படத்தை முடித்துவிட்டுத் தான் 'சர்தார்' படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் கார்த்தி.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
45 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago