'சர்வைவர்' நிகழ்ச்சி தனக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்று அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் துவங்கவுள்ள புதிய நிகழ்ச்சி 'சர்வைவர்'. தனித்தீவில் பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் ஜெயிப்பவரே வெற்றியாளர் என்ற பாணியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் முடிந்துவிட்டன.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளார் அர்ஜுன். இது தொடர்பாக அர்ஜுன் கூறியிருப்பதாவது:
"சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உலகம் முழுவதும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான சர்வைவரில் நான் ஒரு முக்கிய பங்கு வகிப்பது என்பது, இதுவரை நான் கண்டிராத ஒரு புதுமையான அனுபவமாகவே இருக்கும்.
நிகழ்ச்சியின் இந்த மூன்று மாத பயணத்தில், ஒரு தனித்த தீவில் போட்டியாளர்கள் தங்கள் அச்சத்தினை தைரியமாக எதிர்கொண்டு, கடும் சவால்களைக் கடந்து தங்கள் பயணத்தைத் தொடர மேற்கொள்ளும் போராட்டங்களை நேயர்கள் காணலாம். களமிறங்கும் போட்டியாளர்களின் ஆற்றல், தைரியம், விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் ஒரு அசல் போட்டியாக இந்த நிகழ்ச்சி இருக்கும்"
இவ்வாறு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போட்டியாக இந்த நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது ஜீ தமிழ். ஆகையால் பார்வையாளர்கள் இதில் பல்வேறு விஷயங்களைப் புதிதாகச் சேர்க்கத் திட்டமிட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago