இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிய 'காசே தான் கடவுளடா' ரீமேக்

By செய்திப்பிரிவு

'காசேதான் கடவுளடா' ரீமேக் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் 'காசேதான் கடவுளடா'. 1972ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, 'குக் வித் கோமாளி' புகழ், சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படபிடிப்பு 80% முடிக்கப்பட்டுவிட்டது.

இயக்குநர் கண்ணன் இது குறித்து கூறியதாவது:

படப்பிடிப்பு திட்டமிட்டபடி மிகச்சரியாக நடைபெறுவதற்கு, முழு முதல் காரணமாக இருந்தது, எனது படக்குழுவினர் தான். அவர்களுக்கு, என் மனதார நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்திற்காக முழு ஈடுபாட்டுடன், தங்களது முழு உழைப்பையும் தந்த சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ட்ரெயலர், இசை மற்றும் பட வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்