சிம்புவுக்கு நாயகியாக கயடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் சிலம்பரசனுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்காமல் இருந்தது. தற்போது இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்து வருவது உறுதியாகியுள்ளது.
இதில் சிலம்பரசனுக்கு நாயகியாக கீர்த்தி சனோன் நடித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் எதுவுமே தெரிவிக்காமல் இருந்தனர். தற்போது இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு நாயகியாக கயடு லோஹர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கன்னடத்தில் சில படங்கள் நடித்துள்ள இவர், தமிழில் அறிமுகமாகும் படமாக 'வெந்து தணிந்தது காடு' அமைந்துள்ளது.
திருச்செந்தூர் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை, புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago