லாரன்ஸ் இயக்கி நடிக்கும் துர்கா

By செய்திப்பிரிவு

லாரன்ஸ் இயக்கி, நடிக்கவுள்ள படத்துக்கு 'துர்கா' எனத் தலைப்பிட்டுள்ளார்.

'முனி', 'காஞ்சனா', 'காஞ்சனா 2', 'காஞ்சனா 3' எனத் தொடர்ச்சியாக ஹாரர் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ராகவா லாரன்ஸ். இறுதியாக 'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்கை 'லக்‌ஷ்மி' என்ற பெயரில் இந்தியில் இயக்கினார்.

தற்போது தமிழில் மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பியுள்ளார். தனது ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'துர்கா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

எப்போது படப்பிடிப்பு, தன்னுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் உள்ளிட்ட எந்தவொரு விவரத்தையும் லாரன்ஸ் வெளியிடவில்லை. படத்தின் பூஜை அன்று இதர விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

தற்போது கதிரேசன் இயக்கிவரும் 'ருத்ரன்', துரை.செந்தில்குமார் இயக்கவுள்ள 'அதிகாரம்', பி.வாசு இயக்கவுள்ள 'சந்திரமுகி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்