தனுஷ் படத்தில் நடிக்க பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாறன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.
'மாறன்' படத்தை முடித்தவுடன் உடனடியாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தைத் தொடங்குகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் சென்னையில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க கமர்ஷியல் பாணியில் உருவாகவுள்ளது.
இந்தப் படத்தில் தனுஷுடன் நடிக்க பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தனுஷுக்கு நாயகிகளாக ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா நடிக்கவுள்ளனர்.
» ஓடிடி நிகழ்ச்சி: ஒப்புக்கொள்வாரா வடிவேலு?
» பிரபல பாடகர் யோயோ ஹனி சிங் மீது மனைவி வழக்கு: அடித்துத் துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு
அதேபோல், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் தனுஷ் - அனிருத் ஜோடி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை (ஆகஸ்ட் 5) சென்னையில் இந்தப் படத்தின் பூஜை நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago