மிஷ்கினின் 'பிசாசு 2' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் 'பிசாசு 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பிசாசு 2'. ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இதில் ரத்த நிற ஒளி, புகை சூழ, குளியலறையில் பாத்டப்புக்கு வெளியே ஒரு பெண்ணின் கால்கள் மட்டும் தெரிய, கைகளில் சிகரெட் இருப்பது போன்று போஸ்டரை வடிவமைத்துள்ளது படக்குழு.

'பிசாசு 2' படத்தில் கவுரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ளது. குறிப்பாகப் படப்பிடிப்பு நடைபெறாத அடர்ந்த காட்டுப் பகுதியில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.

2014ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பாலா முதல் பாகத்தைத் தயாரித்திருந்தார். நாகா, பிரயாகா மார்டின், ராதாரவி உள்ளிட்டோர் இதில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்