'வலிமை' படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலை வெளியிடும் பணிகளைத் தொடங்கியது படக்குழு.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியானது. ஆனால், எப்போது என்பதே தெரியாமல் இருந்தது. திடீரென்று இன்று (ஆகஸ்ட் 2) காலை முதல் இரவு 'வலிமை' படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று பலரும் பகிர்ந்தார்கள். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள்.
'வலிமை' படத்தின் முதல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இரவு 7 மணியளவில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு. இரவு 10:45 மணியளவில் 'நாங்க வேற மாறி' என்ற பாடல் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. பல மாதங்களாக 'வலிமை' அப்டேட் இல்லாத ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை அளித்தது.
தற்போது யுவன் இசையமைப்பில் வெளியாகியுள்ள பாடலை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். #Valimai, #NaangaVeraMadhiri, #Ajith, #HVinoth, #Yuvan உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன. விரைவில் டீஸர் குறித்த அறிவிப்பும் இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago