வெப் சீரிஸில் ஆர்யா ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகவுள்ள வெப் சீரிஸில் நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் ஆர்யா உழைப்புக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

'சார்பட்டா பரம்பரை' படத்தைத் தொடர்ந்து, ஆர்யா நடிப்பில் 'அரண்மனை 3', 'எனிமி' உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன. இந்தப் படங்களின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஆர்யா. இதனைத் தொடர்ந்து புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஆர்யா.

இதனை அமேசான் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஆர்யா நடிக்கவுள்ள வெப் சீரிஸை மிலந்த் ராவ் இயக்கவுள்ளார். இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் மிலந்த் ராவ். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE