‘‘தமிழில் படம் இயக்க இது பிரமாதமான காலகட்டம். வெற்றி, தோல்வியை கடந்து புதிய முயற்சிகளை எடுப்பவர்கள் இங்கே வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இங்கே படம் எடுக்க ஆசை ஆசையாய் இருக்கிறது’’ என்றபடி பேசத் தொடங்கினார் ‘பொம்மரில்லு’ பாஸ்கர்.
தெலுங்கில் பிரபல இயக்குநரான இவர் தற்போது ‘பெங்களூர் டேஸ்’ என்ற மலையாளப் படத்தை தமிழில் ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். படம் ரிலீஸாகவுள்ள நிலையில் அவரைச் சந்தித்தோம்.
தமிழை பூர்வீகமாக கொண்டவர் நீங்கள். தெலுங்கில் பல நேரடி ஹிட் படங்களைக் கொடுத்தவர். அப்படி இருக்கும்போது தமிழில் உங்கள் முதல் படத்தை ரீமேக் படமாக எடுக்க என்ன காரணம்?
சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த போது நானும், ‘ஜெயம்’ ராஜாவும் நெருக்கமான நண்பர்கள். அங்கே கடைசி தேர்வு எழுதும் போது தெலுங்கு பட ஷூட்டிங்குக்கு வருமாறு என்னை அவர் அழைத்தார். ‘யாரையும் தெரியாது. மொழி பிரச்சினை வேறு இருக்குமே!’ என்று தயங்கி நின்றேன். ‘சும்மா வந்து வேலையைப் பார்’ என்று ராஜா தந்த நம்பிக்கையில்தான் அங்கே போனேன். ஒரு கட்டத்தில் ‘இதுதான் நமக்கு சரியான ஊர்’ என்று அங்கேயே தங்கிவிட்டேன். தெலுங்கில் ‘பொம்மரில்லு’ படம் தொடங்கி அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்தா லும், அதே வெற்றியை இங்கே அடைந்திருந் தால் என் அப்பா இன்னும் மகிழ்ச்சியடைந் திருப்பார் என்று தோன்றியது. இன்றைக்கு அவர் இல்லை. அது ஒரு குறைதான்.
‘பெங்களூர் டேஸ்’ படத்தை இங்கே எடுக்கத் திட்டமிட்ட தயாரிப்பாளர்கள் அந்த படத்தை ஒருமுறை பார்க்கச் சொன்னார் கள். உறவுகள் சார்ந்த கதைக்களம். நானும் உறவுகள் சூழ வளர்ந்தவன் என்பதால் அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இதைத்தொடர்ந்து தமிழில் முதல் படமாக இதை கையில் எடுத்தேன்.
ஆர்யா, ராணா, பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா, திவ்யா, ராய் லட்சுமி, பார்வதி என்ற பல நட்சத்திரங்கள் படத்தில் இருக்கிறார்களே? இவர்களை எல்லாம் எப்படி ஒன்றிணைத்தீர்கள்?
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இப்படத்தை எடுக்கும் வேலைகளில்தான் முதலில் இறங்கினோம். இங்கே 7 பேர், அங்கே 5 பேர் என்று மொத்தம் 12 பேரை வைத்து படத்தின் முதல் கட்ட வேலையை தொடங்கவே 8 மாதங்கள் தேவைப்பட்டன. அதனால்தான் இரண்டு மொழிகள் என்பதை தளர்த்தி முதலில் தமிழில் பண்ணலாம் என்று முடிவெடுத்தோம். ராணா, பாபி, திவ்யா உள்ளிட்ட ஒவ்வொருவருக்குள்ளும் உரு வான கெமிஸ்ட்ரி படத்தை வேகமாக நகர்த்த உதவியது. ஏழு பேரின் தேதிகளை வாங்கி படப்பிடிப்பை தொடங்குவதுதான் சிரமமாக இருந்தது. அவர்களை ஒன்று சேர்த்ததும் அதை படமாக்கும் வேலை மிகவும் சுலபமாக இருந்தது.
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தை அதிகமாக தேர்வு செய்ய என்ன காரணம்?
ஆக்ஷன் களமும் எனக்குப் பிடிக்கும். அதை யும் தொட்டிருக்கிறேன். அதே நேரத்தில் எதார்த்த வாழ்க்கையை படம் எடுக்க எனக்கு மிகவும் பிடிக்கும். என் அனுபவத்தில், நான் பார்க்கும் கேரக்டர்களில் பாதிக்கும் விஷயங் களை படங்களில் கொண்டுவர அதிகம் மெனக்கெடுவேன். நம் வாழ்க்கையில் இருந்து கதையை எடுப்பதால் அதை நுணுக்கமாக எழுத அதிக நேரம் தேவைப்படு கிறது. அதனால் கடந்த 10 ஆண்டுகளில் 5 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறேன். இதெல்லாம் ரொமாண்டிக் காமெடி களத் துக்கு எளிதாக பொருந்துவதால் அந்த மாதிரி படங்களையே நான் எடுப்பது போல் தோன்றுகிறது. நான் எல்லாவிதமான படங்களையும் எடுக்கவே நினைக்கிறேன்.
தெலுங்கில் நீங்கள் இயக்கி பெரிய அளவில் ஹிட் ஆன ‘பொம்மரில்லு’ படத்தை இங்கே ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என்ற பெயரில் ‘ஜெயம்’ ராஜா இயக்கினார். அதை ஏன் நீங்கள் தமிழில் இயக்கவில்லை?
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ரசித்து எழுதி படமாக்கப்பட்ட கதை அது. அப்படம் எனக்கு பெரிய அளவில் பெயரை பெற்றுத்தந்தது. உடனே தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் அதை ரீமேக் செய்ய என்னை அணுகினார்கள். மீண்டும் அதே கதையில் பயணிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால்தான் அந்தக் கதையை அப்போது தமிழில் இயக்கவில்லை.
அடுத்ததாக நீங்கள் இயக்கப்போவது தமிழ்ப் படமா? தெலுங்குப் படமா?
இரண்டு மொழிகளிலும் படம் இயக்க பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. தெலுங்கில் என் ஸ்டைல் படங்களுக்கான இடம் இன்னும் என்னிடம்தான் இருக்கிறது. இங்கே கடந்த நான்கு ஆண்டுகளில் 3 முறையாவது ஆர்யாவும் நானும் அமர்ந்து பேசியிருப்போம். ஒவ்வொரு தடவையும் ‘அடுத்த படத்தை சேர்ந்து பண்ணியே ஆகணும்!’ என்று அமர்வோம். உடனே எனக்கு தெலுங்கு பட வேலை வந்துவிடும். அவரும் வேறொரு படத்தில் நடிக்க போய்டுவார். இதெல்லாம் இப்போது சரிசெய்யப்பட்டு வருகிறது. விரைவில் என் கதையோடு தமிழில் இயக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago