தனது காதலி கன்னிகாவைக் கரம் பிடித்தார் சினேகன். இவர்கள் திருமணம் கமல் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இவருடைய பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பாடலாசிரியராக மட்டுமன்றி, மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு அவர்கள் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே இன்று (ஜூலை 29) சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கமல் தலைமையில் நடைபெற்றது.
சீர்திருத்த முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு சினேகன் - கன்னிகா ரவி தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இன்று இரவு 8 மணிக்கு திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago