இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும்: தனுஷுக்கு பாரதிராஜா புகழாரம்

By செய்திப்பிரிவு

இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும் என்று தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதிராஜா வாழ்த்தியுள்ளார்.

இந்தியத் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் தனுஷ். தற்போது 'தி க்ரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்று (ஜூலை 28) தனுஷின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டுப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"திரையில் தோன்றும் ஒருசில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுருவி நம் உணர்வோடு, உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும். ஆனால், கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதைக் கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்துவிடுவதுண்டு.

நிஜ வாழ்க்கையில் எப்படியோ, அதைத் திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே. அதில் உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் 'நான்' என்கின்ற அகந்தை அற்ற பணிவு, சிறந்த கலை தொழில்நுட்ப அறிவு. இது போதும் டா. இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும்.

பேரன்புமிக்க 'தங்க மகன்' தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்