தென்னக மொழிகளில் எனக்கு அதிக வெற்றிப் படங்கள்: தமன்னா

By ஐஏஎன்எஸ்

தென்னக மொழிகளில் தான் நடித்த படங்களில் அதிக வெற்றியைப் பார்த்திருப்பதாக நடிகை தமன்னா பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் 'தமன்னா'. 'பாகுபலி', 'தேவி', 'தர்மதுரை' உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களில் தமன்னா நடித்துள்ளார். பாலிவுட்டில் 'ஹிம்மத்வாலா', 'எண்டெர்டெய்ன்மெண்ட்', 'ஹம்ஷகல்ஸ்', 'துடக் துடக் துடியா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைத்த அளவு வெற்றி பாலிவுட்டில் அவருக்குக் கிடைக்கவில்லை.

தென்னக்க மொழிகளில் நடிப்பது கடினமா அல்லது பாலிவுட் கடினமா என்று பேசியிருக்கும் தமன்னா, "தென்னகத்தில் நான் அதிக வெற்றிகளைப் பார்த்திருக்கிறேன். எல்லா துறைகளும் ஒரே பாணியில் தான் வேலை செய்கின்றன. வேலை என்று வரும்போது எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் முடிவில் எங்கு வெற்றி கிடைக்கிறதோ அங்கு தான் நாம் அதிகம் ஏற்கப்படுவோம் இல்லையா? அவ்வளவுதான்.

தென்னக ரசிகர்களிடமிருந்து எனக்கு அவ்வளவு அன்பும் ரசிகர்களும் கிடைத்துள்ளனர். நான் செய்யும் பணியா, முழுவதும், உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களை சென்று சேர முடியும் என்று நான் நினைக்கிறேன்" என்று தமன்னா பேசியுள்ளார்.

சமீபத்தில் ஓடிடி தளத்தில் அறிமுகமான தமன்னா 'நவம்பர் ஸ்டோரி' வெப் சீரிஸில் நடித்திருந்தார். அடுத்ததாக 'அந்தாதுன்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார். இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்