விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள 'எனிமி' திரைப்படம் செப்டம்பரில் வெளியாகவுள்ளது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் 'எனிமி'. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வினோத் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் படத்தின் பிரம்மாண்டத்தைப் பாராட்டி வருகிறார்கள். 'எனிமி' டீஸரின் இறுதியில் "உலகத்திலேயே ஆபத்தான எதிரி யார் தெரியுமா? உன்னைப் பற்றி எல்லாமே தெரிஞ்ச உன்னோட நண்பன் தான்" என்ற வசனமும் கவனத்தை ஈர்த்துள்ளது.
'எனிமி' படத்தின் பாடல்களை மட்டுமே தமன் உருவாக்கியுள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட 'எனிமி' தயாராகி வருகிறது.
'எனிமி' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, தற்போது து.பா.சரவணன் இயக்கி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago