ஹிப்ஹாப் தமிழா யூடியூப் பக்கம் முடக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூ-ட்யூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஹிப்ஹாப் ஆல்பம் பாடல்களை இசையமைத்து பாடி வெளியிட்டு வந்தவர் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தின் மூலம் சினிமா இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார்.

2017ஆம் ஆண்டு சுந்தர்.சி தயாரிப்பில் ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார். தற்போது 'சிவகுமாரின் சபதம்' என்ற படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா. அந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த அவரது ஏராளமான ஆல்பம் பாடல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த சேனலில் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்