தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்துக்கு 'ஜெய் பீம்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. மேலும், தனது 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் பல்வேறு படங்களைத் தயாரித்தும் வருகிறார்.
இதில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் ஒன்று. பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் உள்ள சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில் முக்கியமான வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யாவே நடித்துள்ளார். இது சூர்யா நடிப்பில் உருவாகும் 39-வது படமாகும்.
இன்று (ஜூலை 23) சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்துக்கு 'ஜெய் பீம்' எனத் தலைப்பிட்டுள்ளனர். இதில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
» எனக்குத் திருமணமாகி 17 வயதில் மகளா?- சல்மான் கான் பதில்
» ரம்யா கிருஷ்ணனால் வெளியேற்றமா? நடந்தது என்ன?- வனிதா விஜயகுமார் விளக்கம்
ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago