தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிப்பதற்கு பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
தமிழில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படம் தவிர்த்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் படமொன்றில் நடிக்கவுள்ளார்.
'தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெங்கி அட்லூரி. இவருடைய கதையைக் கேட்ட தனுஷ் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தற்போதுள்ள கல்விச் சூழலை முன்வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் வெங்கி அட்லூரி. சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. எப்போது படப்பிடிப்பு என்று தெரிந்தவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனக் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் தயாராகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago