'விஷால் 31' படப்பிடிப்பில் விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் விஷால் நடித்து வரும் 'விஷால் 31' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.
நாயகியாக டிம்பில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டு, பணிபுரிந்து வருகிறது. இதன் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியைத் தற்போது படமாக்கி வருகிறார்கள்.
இதில் விஷால் - பாபுராஜ் இருவரும் மோதும்போது, விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பிசியோதெரபி மருத்துவர் வர்மா படப்பிடிப்புத் தளத்துக்கு வருகை தந்து, விஷாலுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதற்குப் பிறகு விஷால் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்கி, நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஷால்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago