குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு, அவரது அனைத்து ட்வீட்களும் அழிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவில் நட்சத்திரப் பேச்சாளராக வலம் வருபவர் குஷ்பு. கடந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். எப்போதுமே சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் குஷ்பு.
இன்று (ஜூலை 20) காலை குஷ்புவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர். அவருடைய முகப்பு படங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு, ட்வீட்கள் அத்தனையும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், பெயரையும் BRIANN என்று மாற்றியுள்ளனர். இது சமூக வலைதளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் முடக்கம் தொடர்பாக குஷ்பு தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.
அரசியலில் கவனம் செலுத்தினாலும், தொடர்ச்சியாக படங்களிலும் நடித்து வருகிறார் குஷ்பு. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago