'பாகுபலி' வெப்சீரிஸில் நயன்தாரா?

By செய்திப்பிரிவு

'பாகுபலி' வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு 'பாகுபலி: தி பிகினிங்' வெளியானது. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

படத்தின் பிரம்மாண்டம், திரைக்கதை, விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. 2017ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி 2', முதல் பாகத்தை விட மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படங்கள் பெற்ற வெற்றியால் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 'பாகுபலி: பிஃபோர் தி பிகினிங்' என்ற வெப் சிரீஸ் ஒன்றை தயாரிக்க முன்வந்துள்ளது. இது ‘பாகுபலி’ கதை தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாக உருவாகவுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் இத்தொடரை தயாரிக்க நெட்ஃப்ளிக்ஸ் திட்டமிட்டுள்ளது.

‘பாகுபலி’ படங்களில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்திருந்த சிவகாமி கதாபாத்திரத்தில் ‘இறவாக்காலம்’ ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த வாமிகா நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது இத்தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய கதாபாத்திரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்