'ஜகா' போஸ்டரால் உருவான சர்ச்சைக்குப் படத்தின் இயக்குநர் ஆர்.விஜயமுருகன் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆர்.விஜயமுருகன் இயக்கத்தில் மைம் கோபி, 'ஆடுகளம்' முருகதாஸ், வலினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகா'. ஒளிப்பதிவாளராக வி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாய் பாஸ்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 11-ம் தேதி வெளியிடப்பட்டது.
ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு சிவனுக்கு முகக்கவசம் போட்டிருப்பது போன்று ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்திருந்தது படக்குழு. இதனால் இணையத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இது தொடர்பாக இயக்குநர் ஆர்.விஜயமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"ஓம் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் 'ஜகா'. ஜூலை 11-ம் தேதி எங்களது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அது பலரின் விவாதத்துக்கு உள்ளானது. அதுகுறித்துத் தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை. எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கீஸ். பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டுவிட்டுத்தான் படப்பிடிப்பையே தொடங்கினோம்.
அப்படியிருக்கும்போது சிவபெருமானை அவமதிப்போமா? கோவிட்-19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சிதான் அது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறக்கூடாது எனக் கடவுளே சொல்வது போன்றுதான் அந்த போஸ்டர். சக மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட, கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அவமதிக்கப்படவில்லை. அதுபோன்ற எண்ணம் எப்போதும் எங்களுக்கு ஏற்படாது.
மலிவான விளம்பரம் தேடும் விருப்பம் எங்கள் குழுவினருக்குத் துளியும் இல்லை. இருப்பினும் எந்தவித உள்நோக்கமும் இல்லாது செயல்பட்ட எங்களின் இத்தகைய செயல் பலரின் மனதைப் புண்படுத்தியது அறிந்து வருந்துகிறேன். அதற்கான மன்னிப்பு கோருவதோடு கரோனா இல்லாத உலகம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்”.
இவ்வாறு ஆர்.விஜயமுருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago