'எனிமி' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது. விரைவில் டீஸர் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் 'எனிமி'. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வினோத் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. ஆனால், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டதால், ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது.
இதில் விஷால், கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கியது படக்குழு. ஆர்யா காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடித்துவிட்டதால், இதில் அவர் கலந்துகொள்ளவில்லை.
'எனிமி' படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" ’எனிமி’ படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் டீஸர் வெளியாக எல்லாம் தயார். இனிமையான ஓர் அணியுடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. ஆர்யா, மீண்டும் ஒரு அற்புதமான படத்தில் நாம் இணைந்திருப்பது சந்தோஷம்".
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
தற்போது து.பா.சரவணன் இயக்கி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago