'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை இணையத்தில் பெரும் சாதனையை நிகழ்த்தின.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சுமார் 2 ஆண்டுகளாக 'வலிமை' படத்தின் எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது படக்குழு. நேற்று (ஜூலை 11) மாலை மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் என வரிசையாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தது 'வலிமை' படக்குழு.
2 ஆண்டுகள் காத்திருப்பால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தார்கள். இதனால் ட்விட்டர் தளம் முழுக்கவே #Valimai ஹேஷ்டேகுகள் நிறைந்திருந்தன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே, சர்வதேச அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது #ValimaiMotionPoster. அந்த அளவுக்கு ரசிகர்களின் கொண்டாட்டம் அமைந்தது.
» ஓடிடியில் 'நாராப்பா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
» பெண்களுக்காக ஃபார்முலா 1 சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுவதில்லை: நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்
மேலும், இந்தியாவில் தயாரான படங்களின் மோஷன் போஸ்டர்களில் அதிக அளவிலான லைக்குகளைப் பெற்றது 'வலிமை' படம்தான். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ ப்ராஜக்ட்ஸ் மற்றும் சோனி மியூசிக் சவுத் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் ஒரே சமயத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மூன்றையும் சேர்த்துதான் இந்தச் சாதனையை 'வலிமை' நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
'வலிமை' படத்தில் அஜித்துடன் ஹியூமா குரோஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன், எடிட்டராக விஜய் வேலுகுட்டி, சண்டைக் காட்சிகளின் இயக்குநராக திலீப் சுப்பராயன், கலை இயக்குநராக கே.கதிர், ஆடை வடிவமைப்பாளராக அனுவர்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago