சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மனைவியுடன் வாக்களிக்க வந்திருந்தார் சிவகார்த்திகேயன். அப்போது சிவகார்த்திகேயனின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமானது உறுதியானது.
இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். இதனை முன்னிட்டு பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ட்விட்டர் தளத்தில் #KuttySK என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
» சுனில் ஷெட்டி வீடு இருக்கும் கட்டிடத்தை சீல் வைத்த மும்பை மாநகராட்சி
» சஞ்ஜய் லீலா பன்சாலி - ஆலியா பட் திரைப்படம்: நேரடி ஓடிடி வெளியீடா?
தனக்கு மகன் பிறந்திருப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக... என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்".
இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago