ஒரே சமயத்தில் 8 படங்கள்: தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஒரே சமயத்தில் 8 படங்களைத் தயாரித்து வருகிறது அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம்.

பல்வேறு படங்களை விநியோகம் செய்தவர் ரமேஷ் பி.பிள்ளை. மேலும், பல்வேறு படங்களுக்கு பைனான்ஸும் செய்து வருகிறார். தற்போது அபிஷேக் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி சில படங்களைத் தயாரித்துள்ளார்.

இவருடைய தயாரிப்பில் சசி இயக்கத்தில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்', ’த்ரிஷ்யம்’ படக் கூட்டணியின் 'ராம்' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். இதில் 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

தற்போது பல்வேறு நிலைகளில் தயாரிப்பில் இருக்கும் 8 படங்களை அறிவித்துள்ளார் ரமேஷ் பி.பிள்ளை.

* 'கொரில்லா' படத்தின் இயக்குநர் டான் சேண்டி இயக்கத்தில் பிரபுதேவா, ரெஜினா, அனுசுயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'பிளாஷ்பேக்'. இப்படத்தின் காதல் கதையை அழகான பின்னணியில் உருவாக்கி வருகிறார்கள். சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொடைக்கானலில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

* 'மஞ்சப்பை' ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் படம் 'மை டியர் பூதம்'. முற்றிலும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் இணைந்து காணும் வகையில் ஃபேன்டஸி பாணியில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அமெரிக்கா மற்றும் லண்டனில் உள்ள நிறுவனங்கள் பணிபுரிய உள்ளன. இதில் நாயகி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

* நயன்தாரா நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகின்றன. இதில் ஒரு படத்தை ஷாஜி கைலாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விப்பின் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார். இன்னொரு படத்தின் குழுவினர் விரைவில் அறிவிக்கப்படும்.

* பல்வேறு இயக்குநர்களிடம் பணிபுரிந்த ராஜா சரவணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ரவுடி பேபி'. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இதில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளராக சாம் சி.எஸ். பணிபுரியவுள்ளார்.

* 'குலேபகாவலி' படத்தின் ஜோடியான கல்யாண் - பிரபுதேவா மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர். இதில் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, தங்கதுரை, டோனி, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் பிரபுதேவா உடன் நடிக்கவுள்ளனர். ஹாரர் கலந்த காமெடிப் படமாக இது உருவாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

மேலும்