எங்கள் குரு - சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு: கே.பி. குறித்து கமல் பகிர்வு

By செய்திப்பிரிவு

கே.பாலசந்தரின் 91-வது பிறந்த நாளை முன்னிட்டு, கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் கே.பாலசந்தரின் 91-வது பிறந்த நாள் இன்று. பல்வேறு முன்னணி நடிகர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். கே.பாலசந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும், கே.பி.யின் கவிதாலயா நிறுவனமும் கடந்த சில தினங்களாகவே பல்வேறு முன்னெடுப்புகளை சமூக வலைதளத்தில் செய்து வருவது நினைவுகூரத்தக்கது.

தற்போது கே.பி.யின் 91-வது பிறந்த நாளை முன்னிட்டு கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சினிமாவின் அத்தனை வகைமைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் என் வாத்தியார் கேபி. என்னுடைய 16-வது வயதில் அவருடனான அறிமுகம் ஏற்பட்டது. எங்கள் குரு - சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு. அமரர் கே.பாலசந்தரை அவரது 91-வது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன்".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்